சர்வதேசத்தின் நம்பிக்கையை இன்று இழந்துள்ளது இலங்கை சபையில் எதிரணி சுட்டிக்காட்டு.
சர்வதேச ரீதியில் இலங்கை இன்று நம்பிக்கை இழந்துள்ளது என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள், சர்வதேச ரீதியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதனால் சர்வதேச ரீதியில் எமது நாடு இன்று நம்பிக்கை இழந்துள்ளது.
அன்றைய தினம் அலரி மாளிகையிலிருந்தே இந்த வன்முறை வெடித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
தலைகளை மாற்றி அமைக்கப்படும், புதிய அரசை சர்வதேசம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” – என்றார்.