இவ்வாண்டு இலங்கை உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் – பிரதமர்.
இவ்வருடம் உணவை இழக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு உலக அளவில் உணவுப் பற்றாக் குறை ஏற்படும். உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.