உலக குத்துச்சண்டை போட்டியில் அபாரம்.
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் (52 கி.கி.,) தங்கப் பதக்கம் வென்றார்.
துருக்கியில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. இதன் 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் நிகாத் ஜரீன், தாய்லாந்தின் ஜூடாமாஸ் ஜிட்பாங் மோதினர்.
இதில் அபாரமாக விளையாடிய நிகாத் ஜரீன், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தெலுங்கானாவை சேர்ந்த நிகாத் ஜரீன் 25, கடந்த 2019ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.
இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனையானார் நிகாத் ஜரீன்.
தமிழக முதல்வர் பாராட்டு
பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக ஆடித் தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர்.
நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்கசக்தியாக விளங்கும். எனப் பாராட்டியுள்ளார்.