யாழ். பல்கலைக்கழக கீழுழைப்புப் பணியாளர்களுக்கு உலருணவுப் பொதிகள்!

ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள சிவானந்தன் ஆய்வு கூடத்தின் நிறுவுநரும், ஈழத் தமிழ் விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவா சிவானந்தனின் நிதியுதவியுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கீழுழைப்புப் பணியாளர்களுக்கு உலருணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 110 தொழிலாளர்களுக்கும், கிளிநொச்சி வளாகத்தில் பணியாற்றும் 40 தொழிலாளர்களுக்குமாக 150 பேருக்கும் சுமார் 6 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன், பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் எஸ். சுரேஷ்குமார், பிரதிப்பதிவாளர் எம். கணேசலிங்கம் மற்றும் நலச்சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஜங்கரன் உட்பட பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.