தீப்பற்றி எரிந்த 47 வீடுகளுக்கு பதிலாக தலவத்துகொடையில் 101 வீடுகள் : 43வது பிரிவு அம்பலப்படுத்தியது!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல்   அமைதிப் போராட்டத்தின் மீது  தாக்கியமையால் ஆத்திரமடைந்த மக்களால் தீக்கிரையாக்கப்பட்ட 47 வீடுகளுக்குப் பதிலாக 101 வீட்டுத் தொகுதிகள் கொண்ட வீட்டுத் தொகுதியை நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபை நேற்று கையளித்துள்ளது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படும் 47 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் 101 வீடுகளை வழங்கியது ஏன் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் குழு 43 இன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்முறையின் விளைவாக நாற்பது சொத்துக்கள் சேதமடைந்தன. அவர்களுக்கு 101 வீடுகள் எதற்கு? இவற்றில் ஒரு வீட்டின் பெறுமதி 70 மில்லியன் ரூபாவாகும். நகர அபிவிருத்தி அதிகார சபை 1117 மில்லியன் ரூபாவை 101 வீடமைப்புகளுக்காக செலவிட்டுள்ளது. இவ்வளவு அதிக செலவில் கட்டப்பட்ட சொத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அரசாங்கம் வழங்க முடியாது என நினைக்கிறேன். அது நகர அபிவிருத்தி அதிகார சபையையும் திவால் நிலைக்கு தள்ளும் .

ரத்நாயக்க மேலும் உரையாற்றுகையில்,

இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற வேண்டுமானால், அது அரசியல் ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும். மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எவ்வாறு தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார்கள் என்பதை நாம் அண்மையில் பார்த்தோம். அத்துடன் அவர்களின் வேலைத்திட்டம் இந்த அரசாங்கத்தில் இன்னும் தொடர்கிறதா என்பதும் சந்தேகமே. மே 09 தாக்குதலுக்காக குண்டர்களை அழைத்து வந்த நெடுஞ்சாலைத்துறை செயலாளர் குறித்து நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன பாராளுமன்றத்தில் பேசினார். இன்னும் தங்களுக்குத் தகுந்தாற்போல் டெண்டர் விடுகிறார். மத்திய விரைவுச் சாலைக்கான 880 மில்லியன் டாலர் ஏல விவகாரத்தின் பின்னிருந்து செயல்பட்டார். அவர் யுகதானவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மின்சார சபையின் தலைவர். அவர் இன்னும் வேலை செய்கிறார். ஒரு இடைக்கால அரசு வெற்றிபெற, தனிமனித அரசியல் நலன்களுக்காக உழைக்கும் அதிகாரிகள் இருக்கிறார்களா என்பது சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.