‘மே – 9’ வன்முறை: 1,348 பேர் கைது!

‘மே – 9’ வன்முறைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் நாடு முழுவதும் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை இன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதானவர்களில் 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், 654 பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.