மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தணமடு ஆற்றுப்பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு , ல்லுக்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வைத்தியராசா கோவிந்தராசா (வயது – 37) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
தனது செங்கல் உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று அங்கு வேலை செய்து விட்டு, இரவாகியமையால் தான் தங்கிருக்கும் குடிசைக்குச் சென்று இருக்கும்போது காட்டுக்குள் இருந்த யானை இவரைத் தாங்கியுள்ளது.
படுகாயமடைந்த இவர் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.