வன்முறை தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 1348 ஆக உயர்ந்துள்ளது

மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 1348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களில் 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 654 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.