பொலிஸ்மா அதிபரை ஐந்தரை மணிநேரம் துருவியது சி.ஐ.டி.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கி பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த ஒன்பதாம் திகதி அலரிமாளிகைக்கு அருகிலும் மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி வருன ஜயசுந்தர மற்றும் பொலிஸ் விசேட பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ தனபால ஆகியோர் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.