பின்லாந்தை மேலும் பழிவாங்கிய ரஷ்யா!
பின்லாந்து நாட்டுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தி ரஷ்யா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பின்லாந்து அரசு உடைமையான Gasum எரிவாயு விநியோகத்திற்கான பணத்தை ரூபிளில் செலுத்த மறுத்துவிட்டது.
மேலும் பின்லாந்து நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் போர் நீடிக்கும் போதும் ரஷ்யா பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை தொடர்ந்து வருகிறது.
ஆனால் மேலும் பின்லாந்துக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.