யாழிலுள்ள விற்பனை நிலையம் அதிகாலை முற்றாக எரிந்து நாசம்.

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ, கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது பயனளிக்காத நிலையில் கடை முற்றாக எரிந்துள்ளது.
விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.