எரிபொருளுக்குத் தொடரும் நீண்ட வரிசை!

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.

பரீட்சைக் கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காலை நேரத்தில் மூடப்பட்டே காணப்பட்டன.

அதேவேளை, எரிபொருள் பவுஸர்கள் வருகை தந்தவுடன் மாலை வேளைகளில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.