வெள்ளியங்கிரியில் 7 மலை ஏற்றம்.. 22 மணிநேரம் நடை பயணம் செய்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு ஆய்விற்காக வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுமார் 22 மணி நேரம் நடைபயணம் மேற்கொண்டு, சுயம்பு லிங்கத்தை சரிதனம் செய்ததோடு, பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வசதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் இந்து சமயம அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காலை 7 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன், உள்ளிட்ட அதிகாரிகளுடன் வந்த அவர் தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தனர்.
பிறகு வெள்ளியங்கிரியில் உள்ள 7 மலை ஏற்றம் பயணத்தை துவங்கினார் அமைச்சர் சேகர்பாபு. வெள்ளியங்கிரி மலையில் உள்ள 7 மலைகளை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட முதல் துறை சார்ந்த அமைச்சர் சேகர்பாபு ஆவார். 7 மலைகளுக்கு நடந்து சென்ற அவர் இறுதியாக சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, வசதிகள், குறிந்து வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து மீண்டும் மாலை கீழே இறங்கத்துவங்கிய அமைச்சர் சரியாக அதிகாலை 5 மணிக்கு கீழே வந்தடைந்தார்.சுமார் 22 மணி நேரம் நடை பயணம் செய்த அமைச்சர் சேகர்பாபுவுடன் வனத்துறை, தீயணைப்புதுறை, மருத்துவர் குழுவினரும் மலையேற்றத்தின்போது உடன் இருந்தனர்.