புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்! – ரணில் அழைப்பு.

நாட்டின் தற்போதைய பொருளாதார குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தநிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.
மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் அல்ல உள்நாட்டில் இருப்பவர்களும் உதவிகளைச் செய்ய முடியும்” – என்றார்.