சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்! – ரெலோ அழைப்பு.
தற்போதைய சந்தர்ப்பத்தைச் சரியான முறையில், சிறப்பாக ஒருமித்து நின்று கையாள்வதற்கு அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தயவுடன் அழைக்கின்றோம் என்று ரெலோ அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசமைப்பில் உள்ள அதிகாரங்களை 21ஆவது திருத்தத்தின் மூலம் நிரந்தரமாக்கவும் நடைமுறைப்படுத்தவும் நாம் முயல வேண்டும் என்று ரெலோ கோரியுள்ளது.
இது தொடர்பில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.