31 ஆண்டுகளாக தாமதிக்கப்பட்ட நீதி : சண் தவராஜா






“30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
1/2 pic.twitter.com/PyGviFJSJ5
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 18, 2022
மறுபுறம், பேரறிவாளனின் விடுதலையை வென்றெடுத்ததில் மு.க.ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க.வுக்குத் தொடர்பு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாக மாறி விடுகின்றது. பேரறிவாளன் விடயத்தில் இது துல்லியமாகத் தெரிகின்றது. 19 வயது இளைஞனாக இருந்த போது, எதற்காகச் செய்கிறோம் எனத் தெரியாமலேயே இரண்டு மின்கலங்களை வாங்கிக் கொடுத்தற்காக, காவல் துறையின் சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலும், வஞ்சக எண்ணத்துடன் வாக்குறுதிகளை வழங்கி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்ட நிலையிலும் ஒரு இளைஞனை 31 வருடங்கள் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்து, அவனை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்தது மாத்திரமன்றி, ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கிய காலகட்டமாக உள்ள இளமைக் காலத்தைச் சிதைத்துவிட்டு அவனை விடுதலை செய்வது என்பதை எவ்வாறு ‘நீதி’ நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொண்டாடுவது?