உணவுப் பிரச்சினையால், ஐரோப்பா மீண்டும் மிகப்பெரிய புலம்பெயர்தல்…….
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா உருவாக்கியுள்ள உணவுப் பிரச்சினையால், ஐரோப்பா மீண்டும் மிகப்பெரிய புலம்பெயர்தல் பிரச்சினையை எதிர்கொள்ள இருப்பதாக டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் அமைந்துள்ள டாவோஸில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய போலந்து ஜனாதிபதியான Andrzej Duda, புடினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவுப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக வட ஆப்பிரிக்காவில் பசிப் பிரச்சினை ஏற்படுமானால், ஸ்பெயின் மற்றும் தெற்கு ஐரோப்பா முழுவதிலும் மிகப்பெரிய அளவிலான புலம்பெயர்தல் பிரச்சினை உருவாகும் என்றார்.
ஆகவே, நாம் உக்ரைனிலுள்ள உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.
அவரது கருத்துக்களையே பிரதிபலித்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyen, ரஷ்யா பிளாக் மெயில் செய்வதாக குற்றம் சாட்டினார்.
புடினால் உருவாக இருக்கும் மிகப்பெரிய புலம்பெயர்தல் பிரச்சினை: டாவோஸ் மாநாட்டில் தலைவர்கள் எச்சரிக்கை
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதியிலிருந்து ரஷ்ய இராணுவத்தினர் உணவு தானியங்களையும் இயந்திரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள் என்று கூறிய அவர், கருங்கடல் பகுதியிலோ, ரஷ்ய போர்க்கப்பல்கள், கோதுமை மற்றும் சூரியகாந்தி விதைகளை சுமந்து நிற்கும் உக்ரைன் கப்பல்களைத் தடுத்தபடி நிற்கின்றன என்றார்.
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதாலும், அதற்கான தண்டனையாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த முயல்வதாலும், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உரம் மற்றும் எரிபொருட்களின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உலகில் ஏற்பட்டுள்ள இந்த உணவுப் பிரச்சினைக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என்று கூறியுள்ள ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவின் நவ யுக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான தடைகளை விதித்துள்ளதாலேயே இந்த உணவுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.