இலங்கை தொடர்பாக , உலக வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கை வரைவொன்று தயாரிக்கப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதி உதவித் திட்டங்களை வழங்காதிருப்பதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நிறுவனங்களுடன் இணைந்து இலங்கைக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரியான சர்வ பொருளாதார வரைவொன்று இலங்கையினால் தயாரிக்கப்பட வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.