பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமுல்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் பஸ் கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 350 பிரிவுகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தப்பட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 22 ரூபாவாகக் காணப்பட்ட சாதாரண சேவையின் ஆகக்கூடிய கட்டணம் 2 ஆயிரத்து 417 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டண அதிகரிப்புக்கு அமைய, கொழும்பிலிருந்து கண்டிக்கான சாதாரண சேவைக் கட்டணம் 457 ரூபாவாகவும், குளிரூட்டப்பட்ட சேவைக் கட்டணம் 760 ரூபாவாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு முதல் யாழ்ப்பாணத்துக்கான சாதாரண சேவைக் கட்டணம் 1,438 ரூபாவாகவும், அரை சொகுசு சேவைக் கட்டணம் 1,799 ரூபாவாகவும், குளிரூட்டப்பட்ட சேவைக் கட்டணம் 2 ஆயிரத்து 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு முதல் நுவரெலியாவுக்கான சாதாரண சேவைக் கட்டணம் 711 ரூபாவாகவும், அரை சொகுசு சேவைக் கட்டணம் 888 ரூபாவாகவும், குளிரூட்டப்பட்ட சேவைக் கட்டணம் 1,185 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அதிகவேக நெடுஞ்சாலை பேருந்துகள் மற்றும் அதிசொகுசு பஸ்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.