ராஜபக்சக்களின் பாதுகாவலர்களாக இருப்பதா? அல்லது மக்களின் பாதுகாவலர்களாக இருப்பதா? சஜித் கேள்விக்கணை.
“சந்தர்ப்பவாத அரசியலைக் கடைப்பிடித்து ராஜபக்ச குடும்பத்தின் காவலராக மாறுவதா அல்லது கொள்கை அடிப்படையில் மக்கள் சேவையில் ஈடுபடுவதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாக்கும் தலைமை செயல் அதிகாரியாகவோ அல்லது அதன் உறுப்பினராகவோ இருக்கத் தாம் ஒருபோதும் தயாராக இல்லை எனவும் அவர் கூறினார்.
திருட்டுகள் குறித்து கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இந்த அரசும் திருடர்களைப் பாதுகாப்பதையே மேற்கொள்கின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.