6 வாரங்களுக்குள் இடைக்கால பட்ஜட் – ரணில் அறிவிப்பு.
எதிர்வரும் 6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று பிரதமரும் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இரண்டு வருட நிவாரணத் திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக உட்கட்டமைப்புத் திட்டங்களை இரத்துச்செய்யத் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ரொய்ட்டர்ஸ்’ செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.