“நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வாரத்திற்கு ஏனும் போதுமானதாக இல்லை”
“நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வாரத்திற்கு ஏனும் போதுமானதாக இல்லை” என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று நிச்சயப்படுத்திக் கூற முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் வலியுறுத்துகின்றார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க வேண்டியிருக்கும், மேலும் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குக் கூட வருமானம் இருக்காது என்றும், அடுத்த வருடத்திற்குள் நெருக்கடியை சரியான பாதைக்கு கொண்டு வந்தாலும் நாட்டை நல்லதொரு இடத்திற்கு கொண்டு செல்வது கடினம் எனவும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அவர்கள் இது சம்பந்தமாக மேலதிக விளக்கமளிக்கையில் தெரிவித்துள்ளார்.