பெங்களூர் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி.
நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது மட்டும் நான்காவது இடத்தில் இருந்த லக்னோ மற்றும் பெங்களூர் இடையேயான எலிமினேட்டர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ராஜட் படித்தர் 112* ரன்களும், தினேஷ் கார்த்திக் 37* ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு டி காக், மணன் வோஹ்ரா ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், கே.எல் ராகுல் மற்றும் தீபக் ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் லக்னோ அணி கடைசி மூன்று ஓவரில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது.
துவக்கத்தில் இருந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல், இறுதி வரை தாக்குபிடித்து போட்டியை வெற்றிக்கரமாக முடித்து கொடுக்க தவறி 79 ரன்களில் விக்கெட்டை இழந்ததாலும், கடைசி மூன்று ஓவர்களில் ஹர்சல் பட்டேல் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் மிக மிக சிறப்பாக பந்துவீசியதாலும், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
லக்னோ அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.