ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் சந்திப்பு.

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினருக்கும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தமுறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாத் தாக்கம் கரணம் கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ் யாத்திரைக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை.
இந்நிலையில், இந்தமுறை 1,585 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால், பயணக் கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டியுள்ளது என அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச அனுமதியுடன் குறித்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டது என சுற்றாடல் அமைச்சரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.