வெல்கம எம்.பி. மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கடந்த 9ஆம் திகதி கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானார்.
இதன்போது, அவரின் தலை மற்றும் கை முதலான பகுதிகளில் காயம் ஏற்பட்டிருந்தது.
அதேநேரம், அவர் பயணித்த ஜீப் ரக வாகனமும் சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.