விமலின் மனைவி மேன்முறையீடு! – மே 30ஆம் திகதி பரிசீலனை.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டைத் தயாரித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றிருந்ததற்கு அமைய, இது தொடர்பில் விசாரணை செய்த, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவால் சஷி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, ஆறு மாதகால சிறைத் தண்டனையை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார்.