’21’ நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து வெளியேறும் சு.க.
“அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும்” என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராயப்பட்டது.
மத்திய செயற்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,
“21ஆவது திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும். இழுத்தடிப்பு இடம்பெறக்கூடாது. அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால், அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும்” – என்றார்.