ரூபாயைப் பாதுகாக்க 5.5 பில்லியன் டாலர்களை அழித்தது மத்திய வங்கி : கலாநிதி ராணி ஜெயமஹா
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையில் இருந்த தான் உட்பட ஏனைய அங்கத்தவர்கள் பலர் ரூபாயின் மதிப்பை 203 ஆக பாதுகாக்க அந்நிய கையிருப்புகளை தொடர்ந்து பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்திய போதும் , நாணய வாரியத்தில் முக்கிய பதவிகளில் இருந்த சிலர் அதைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டார்கள் என கலாநிதி ராணி ஜெயமஹா அண்மையில் பாராளுமன்றத்தில் கோப் குழுவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் 2020ம் ஆண்டு ரூபாயின் பெறுமதியை 203 இல் நிலையாக வைத்திருப்பதற்காக சுமார் 5.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்புகளை அழித்ததாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.