யாழில் கைக்குண்டு மீட்பு!

யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலய வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுகின்றது என இராணுவத்தினருக்கு நேற்றுக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.