நாட்டில் நாளாந்தம் 2,500 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்.

இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்கின்றனர் என்று குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்போதே அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக எண்ணிக்கையிலானோர் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையால் பத்தரமுல்லையில் நாளாந்தம் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகின்றது.