ரணிலுக்குச் சகலரும் ஒத்துழைப்பு வழங்குக சம்பிக்க வேண்டுகோள்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
43ஆம் படையணியின் தலைவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன்னரும் 2001ஆம் ஆண்டில் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது ரணில் விக்கிரமசிங்கவால் அதனை வெற்றிகொள்ள முடிந்தது. இம்முறையும் அவர் அதனை வெற்றி கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு.
அதற்கு அனைவரும் பிரதமர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த நெருக்கடிகள் தீராது போனால் நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு வெடிக்கும்” என்றும் சம்பிக்க ரணவக்க எம்.பி. எச்சரித்துள்ளார்.