முடியாவிட்டால் விலகிடுவேன்! ரணில் அதிரடி அறிவிப்பு.
“நாட்டை என்னால் நிமிர்த்த முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன்.”
– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மற்றவர்கள் போல் எனக்குப் பதவி ஆசை இல்லை. நாட்டின் நலன் கருதியே பிரதமர் பதவியை ஏற்றேன். அதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் நிதி அமைச்சையும் பொறுப்பேற்றேன்.
நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்களுடனும், உதவிகள் வழங்கும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருகின்றேன்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், எதிர்கால நிலைமை குறித்தும் உண்மைத் தகவல்களையே நான் வெளியிட்டு வருகின்றேன்.
எனது கருத்துக்கள் தொடர்பில் எவரும் பதற்றம் அடையத் தேவையில்லை.
நாட்டை நிமிர்த்துவதே எனது குறிக்கோள். இதை என்னால் செய்யமுடியாது போனால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன்” – என்றார்.