12 எம்.பிக்களிடம் சி.ஐ.டி. வாக்குமூலம்.

12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.