கோட்டாவோடு வேலை செய்ய முடியாது : சொன்னது ரணில் :அரசியல் சதுரங்கம்
கடந்த வாரம் இலங்கை அரசியலை புரட்டிப் போட்ட நிகழ்வுகளில் ஒன்று, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தொடர்பில் வதந்திகளை பரப்பி வந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் இணைந்து அரசாங்கத்துடன் இணைந்து ஜனாதிபதியிடமிருந்தே இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது.
இதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டதற்கு முக்கியக் காரணம், ஜனாதிபதியை அதிகம் விமர்சித்த இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களாக ஹரினுவும் மனுஷாவும் நன்கு அறியப்பட்டிருந்தனர்.
சேர் ஃபெயில் என்ற எண்ணத்தை நாட்டில் விதைக்க முன்முயற்சி எடுத்தவர்கள் ஹரினும் மனுஷவும்தான்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக பாராளுமன்றத்தில் பல்வேறு இரகசியங்களை ஹரினுவும் மனுஷவும் முதன்முதலில் நாட்டுக்கு வெளிப்படுத்தியவர்கள்.
ஆனால் ஜனாதிபதி செய்தது என்னவென்றால் வகுப்பில் உள்ள மோசமான பிள்ளைக்கு மொனிட்டர் பதவி கொடுப்பது போல , கோட்டா , ஹரீனையும் மனுஷாவையும் தன்னிடம் கொண்டு வந்து, இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளார்.
அதன்படி, இப்போது ஹரினும், மனுஷவும் சேர் ஃபெயில் என்று சொல்வதில்லை. அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் குறித்தும் அவர்கள் வழமை போன்று விசேட வெளிப்பாடுகளை வெளியிடுவதில்லை.
தயவுசெய்து புகைப்படங்களை வெளியிட வேண்டாம்!
ஹரினும் மற்றும் மனுஷவும் ஜனாதிபதியிடம் சென்று அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட போதிலும் அது தொடர்பான புகைப்படங்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்படவில்லை.
ஹரீன் மற்றும் மனுஷாவுடன் மேலும் ஆறு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், அந்த 6 பேரின் புகைப்படங்கள் மாத்திரம் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அப்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
இதனால் ஹரின், மனுஷாவின் புகைப்படங்கள் என்ன ஆனது என்று பலரும் தேடினர். அதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
உதவிய மனுஷவின் பழைய தோழன் சுதேவ!
தற்போது ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றும் சுதேவ ஹெட்டியாராச்சி மனுஷாவின் நெருங்கிய நண்பர்.
ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கும் முன்னர் சுதேவ கடைசியாக ஸ்வர்ணவாஹினியின் தலைமைத்துவத்தில் கடமையாற்றினார்.
மனுஷ தனது அரசியலைத் தொடங்குவதற்கு முன்னர் ஸ்வர்ணவாஹினியில் தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அன்றிலிருந்து மனுஷவுக்கும் சுதேவாவுக்கும் ஊடக நட்பு நெருக்கமாக இருந்தது. எனவே, அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் மனுஷ சுதேவாவிடம் பேசி, முடிந்தால் தானும் ஹரீனும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மனுஷவை விட ஹரின் அதை விரும்பினார்.
ஹரீன் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவர் என்பதால், ஜனாதிபதியிடமிருந்து , பதவிகளை பெறும் புகைப்படங்களை வெளியிட்டால் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கும் , நையாண்டிக்கும் உள்ளாகும் என்று ஹரின் மனுஷாவிடம் கூறினார்.
அதன்படி, முன்னர் குறிப்பிட்டபடி மனுஷ, சுதேவாவை அழைத்து போட்டோக்களை வெளியிடாதிருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஏனைய அனைத்து அமைச்சர்களும் , ஜனாதிபதியிடமிருந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது ஊடகப் பிரிவினரால் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட போதிலும், வேண்டுகோளின் பிரகாரம் ஹரீனும் மனுஷத்தும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை.
வெட்கக்கேடான சுய விளம்பரம்.
எனினும், அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற சில மணித்தியாலங்களுக்குள் ஹரீன் சுற்றுலாத்துறை அமைச்சுக்குச் சென்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அழைத்தமையினால் விடயங்கள் குழப்பமடைந்தன.
ஜனாதிபதியிடமிருந்து அமைச்சர் பதவியை துணி உடுத்திக் கொண்டா எடுத்துக்கொண்டீர்கள்? என ஊடகவியலாளர்கள் ஹரினிடம் நக்கலாக கேட்டபோது அனைத்தும் தலைகீழாக மாறியது.
ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு அசிங்கமாக இருந்தது என ஹரின் தெரிவித்தார். ஜனாதிபதியின் கையால் அருவருப்போடு அமைச்சுப் பதவியை தாம் பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதியின் முகத்தைக்கூட பார்க்கவில்லை எனவும் ஹரின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அது எப்படி கிடைத்தது என்று திரும்பத் திரும்பச் சொன்ன ஹரின், தலையைத் திருப்பிக் கொண்டு, ‘நான் இப்படித்தான் பதவியை எடுத்தேன்’ என தலையை திருப்பி காட்டினார்.
இந்த தகவலை ஊடகங்கள் செய்தியாக வெளியிட நடவடிக்கை எடுத்திருந்தன.
ஹரினை துகிலுரித்த ஊடகப் பிரிவு!
. ஹரினின் பேச்சை ஊடகங்கள் கொழுத்தி அதிக விளம்பரம் செய்ததைக் கண்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவும் அனைத்து விசுவாசங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஹரீன் அமைச்சுக்களை பொறுப்பேற்ற புகைப்படங்களை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுத்தது.
ஹரினின் கூற்றுப்படி, புகைப்படங்களில் எந்த சங்கடமோ அல்லது அருவருப்போ தெரியவில்லை. ஹரின் சொன்னது போல் திரும்பிப் பார்க்காமல், ஜனாதிபதியின் முகத்தைப் பார்த்துச் சிரிப்பது தெரிந்தது. ஊடகங்களுக்கு ஹரின் கூறிய பொய் சில மணித்தியாலங்களில் நாட்டுக்கே தெரிந்தது.
21 முன்னோக்கிச் செல்வதா அல்லது பின்னோக்கிச் செல்வதா?
நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே ‘கோட்டா வீட்டுக்குப் போ’ என காலிமுக மைதானத்திற்கு முன்பாகப் போராடிய இளைஞர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது.
இதன் காரணமாக அண்மையில் 21வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதில் ஒன்று விஜயதாச ராஜபக்ச எதிர்கட்சியில் இருந்தபோது பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த 21வது அரசியலமைப்பு திருத்தம்.
மேலும், 21வது அரசியலமைப்பை உருவாக்க சமகி சஜித் தரப்பும் நடவடிக்கை எடுத்திருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கத் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
21ஆ அமைச்சரவைக்கு வந்தது!
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் மூலம், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் துரிதப்படுத்தப்படுவதாக தெரிந்தது.
நீதியமைச்சராக பதவியேற்ற விஜயதாச ராஜபக்சவும் 21வது திருத்தத்தை திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதாகவும், அதன் பின்னர் அது அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கூட்டிய மொட்டு அமைச்சரவை
21வது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க திரு.விஜயதாச ராஜபக்ஷ தயாராகி வருவதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மொட்டை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்களை ஜனாதிபதி உடனடியாக ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுத்தார்.
பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
விஜயதாசவும் ஹரீனும் 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருந்ததைப் போன்று தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருவதாகவும், 21ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழித்தால் நாட்டில் அரசியல் அராஜகம் தலைதூக்கக்கூடும் எனவும் அமைச்சரவை அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
எனவே இந்த நேரத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும் என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, திங்கட்கிழமை அமைச்சரவையில் 21வது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதில்லை என ஜனாதிபதி இறுதியாக தீர்மானித்தார்.
21ஐ இப்படி கொண்டு வராதீர்கள்! ஜனாதிபதி கடும் தீர்மானம்!
அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் மற்றுமொரு விடயத்தை சொன்னார்கள்.
21வது திருத்தச் சட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டால், அதற்குள் வரைவு அனைத்து அமைச்சர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், இதுவரை கடிதம் கிடைக்கப்பெறாத காரணத்தினால் அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது தமக்கு தெரியாது என அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
இதன்படி ஜனாதிபதி உடனடியாக விஜயதாச ராஜபக்ஷவை அழைத்து 21வது திருத்தத்தை அமைச்சரவை பத்திரமாக அமைச்சரவையில் முன்வைக்க முடியாது என அறிவித்தார்.
விஜேதாஸவும் ஹரினும் மீண்டும் மல்யுத்த பேச்சு!
இந்தப் பின்னணியில் 21வது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் முன்வைக்க முடியாது என்பதை விஜயதாசவும் உணர்ந்ந்தார்.
அதன்படி திங்கட்கிழமையன்று அமைச்சரவையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நிச்சயமாக முன்வைப்பதாகவும், இல்லாவிடின் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு எதிர்க்கட்சியில் அமர்வதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கடுமையாகத் தெரிவித்தார்.
விஜயதாசவுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஹரினும், 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் முன்வைக்காவிட்டால், தானும் அமைச்சர் பதவி தொடர்பில் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்கத் தயார் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அமைச்சரவை பத்திரத்துக்கு பதிலாக, ஒரு துண்டு காகிதம்!
ஆனால் 21வது திருத்தச் சட்டம் என்ற அமைச்சரவைப் பத்திரம் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதே உண்மையான கதை.
மாறாக, 21வது திருத்தச் சட்டம் குறிப்பிடப்பட்ட ஒரு துண்டு காகிதமே முன்வைக்கப்பட்டது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் இணக்கப்பாடும் பெறப்பட வேண்டுமென ஜனாதிபதி கலந்துரையாடலின் போது நேரடியாகத் தெரிவித்தார்.
மொட்டு அமைச்சர்களின் கருத்தும் இதுவே என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்தார்.
விஜேதாசவின் 21வது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியும் பொஹொட்டுவின் அமைச்சரவை அமைச்சர்களும் கால்பந்தை போல நான்கு திசைகளிலும் தாக்கியதே உண்மையில் நடந்தது.
இதன்படி விஜேதாசவின் 21 க்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஹரினுக்கு ஜனாதிபதி சன்மானம்! மௌனமாக கேட்கிறது!
பின்னர் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதாவது ஹரீனின் பல பேச்சுக்களுக்கு பதிலளிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
அரசாங்கத்தில் இருந்தால் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கண்ட கண்ட இடங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி ஹரினுக்கு அறிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான உடனேயே கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கூட்டுப்பொறுப்பைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும், அமைச்சர்கள் வெளியில் சென்று வித்தியாசமாகப் பேசியதன் காரணமாகவே கடந்த அமைச்சரவை நெருக்கடி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பிரசன்னாவும் இப்படி அறிவித்த பின் , எதுவும் பேசாமல் ஹரினின் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.
21 குறித்த மொட்டின் அதிகாரப்பூர்வ கருத்து!
எவ்வாறாயினும், இந்த அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் மொட்டு , அமைதியாக இருக்கவில்லை.
தமது கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடாக 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சியின் கருத்தை நாட்டுக்கு அறிவித்தனர்.
மொட்டுவின் உதவியுடன் ரணிலை பிரதமராக்கியது அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு அல்ல என்றும் நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியை ஆராயவே தாங்கள் ரணிலை பிரதமராக்கியது என்றும் சாகர காரியவசம் தெளிவுபடுத்தினார்.
நாடு முழுவதும் எரிவாயு, எண்ணெய் மற்றும் பால் பவுடர் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன என்று கூறிய சாகர, பிரதமர் முதலில் அந்த வரிசைகளை அகற்ற வேண்டும் என்று கூறினார்.
அதன் பின்னரே அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதோடு, மேலும் ஒரு விஷயத்தை வலியுறுத்த சாகர நடவடிக்கை எடுத்தார். அதாவது தனி நபரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு திருத்தங்களை கட்சி என்ற ரீதியில் மொட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. பசிலை இலக்கு வைத்து விஜயதாச 21வது திருத்தத்தை கொண்டு வந்ததாக சாகர தெரிவித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது.
மொட்டு கட்சியினர் , அதை ஆதரிக்கப் போவதில்லை. இதன்படி, விஜயதாச ராஜபக்ச நினைப்பது போன்று 21வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட மாட்டாது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
சட்டத்தரணிகள் சங்கமும், சஜித்தும் எதிர்ப்பு!
மறுபுறம் விஜயதாசவினால் கொண்டுவரப்பட்ட 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் , ஐக்கிய மக்கள் சக்தியும் உடனடியாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
விஜயதாசவினால் கொண்டுவரப்பட்ட 21வது திருத்தம் உண்மையில் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோட்டா பற்றி ரணில் …..
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அன்றிரவு ரணில் தனது நண்பர்கள் சிலரைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினார்.
அன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரணில் ஹரினை எச்சரித்ததுடன் ஜனாதிபதியின் தாக்குதல் தொடர்பில் நீண்ட நேரம் கருத்து வெளியிட்டமை விசேட நிகழ்வாகும். இது ஒரு அச்சுறுத்தல் என்று கூறிய ரணில், 21வது திருத்தச் சட்டம் தொடர்பான ஜனாதிபதியின் நிலைப்பாட்டை விமர்சித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது கடினம் என ரணில் தனது நண்பர்கள் முன்னிலையில் தெரிவித்தமை அன்றைய விசேட நிகழ்வாகும்.
வாக்குறுதியளிக்கப்பட்ட உலக உதவி?
ரணில் புதிய பிரதமரானவுடன் சர்வதேச உதவிகள் கொட்டும் என சில ஊடகங்கள் மேற்கொண்ட பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்றும் ஊடகங்கள் கூறுவது போன்று எதுவும் நடக்கவில்லை என்றும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினோம்.
உதாரணமாக, ரணில் பதவியேற்றவுடன் ஜப்பான் 5 பில்லியன் டொலர் உதவி வழங்கும் என ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட போதிலும், அது நடக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம். மேலும், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டும் என கூறியுள்ளதாக நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இலங்கை பற்றிய வார்த்தையே இல்லை!
எவ்வாறாயினும், கடந்த 24ஆம் திகதி ஜப்பானில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெற்ற கோட் மாநாட்டில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடி அரசாங்கத்திடம் உதவி கோரப்படும் என கடந்த வார அரச இரகசியங்களை நிறைவு செய்திருந்தோம்.
ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் தெரிவித்திருந்தார் என அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டோம்.
இம்முறை இந்த ‘கோட்’ கூட்டத்தில் இலங்கை பற்றி பேசப்படும் என்று பலர் நினைத்தாலும், குறைந்த பட்சம் இலங்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை.
குறைந்த பட்சம் மோடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போதும் அல்லது நான்கு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போதும் இலங்கை தொடர்பில் மோடி கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், அதனைத் தீர்க்க இந்தியா உதவும் என்றும் மோடி பின்னர் கூறினார்.
சமந்தாவிடம் ரணில் உரையாடல் ….
‘கோட்’ கூட்டத்தின் முடிவு இலங்கைக்கு பாதகமாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டவுடன் ரணில், USAID அமைப்பின் தலைவர் சமந்தா பவருக்கு உடனடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அவசர உதவி தேவை என ரணில் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க ரணில் மற்றும் அரசாங்க ஆதரவு தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த அழைப்பு தொடர்பாக USAID இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக , தொடர்ந்து செய்திகளை பரப்புரை செய்து வந்தன.
ஆனால் அது அவ்வாறு இல்லை. தனது அமைப்பு முன்னர் தீர்மானித்தவாறு உதவிகளை வழங்க வேண்டுமானால் முதலில் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இடம்பெற வேண்டும், அதன் பின்னர் இலங்கைக்கான உதவிகள் குறித்து கலந்துரையாடலாம் என சமந்தா பவர் ரணிலிடம் தெளிவுபடுத்தியிருந்தார். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்கு தனது நிறுவனம் உதவ முடியும் என சமந்தா பவர் ரணிலிடம் தெரிவித்தார்.
ரணிலுக்கு நிதியமைச்சகம் தலை கீழாக மாறியது எப்படி!
எவ்வாறாயினும், கடந்த வார தொடக்கத்தில் இருந்து இலங்கைக்கு உதவி கேட்பதற்கு முன், எந்தவொரு நிதியமைச்சரும் நியமிக்கப்படாதது பாரதூரமான சூழ்நிலையாக இருந்தது. தனக்கு நிதியமைச்சு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் யோசனை தெரிவித்திருந்த போதிலும், ரணிலுக்கு நிதியமைச்சகத்தை வழங்கக் கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்தார்.
ஜனாதிபதியை பாதித்த காரணங்கள் இருந்தன. கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியங்களையும் அறிக்கைகளையும் வழங்கிய அப்போதைய பிரதி ஆளுநராக இருந்த கலாநிதி நந்தலால் வீரசிங்கவை ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமை இதற்கு முக்கிய காரணமாகும்.
இதற்குக் காரணம், ரணிலுக்கு நிதியமைச்சகம் வழங்கப்பட்டால், மத்திய வங்கியும் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்ற வதந்திகள் பரவியிருந்தன. இதன்படி குறுகிய காலமே நிதி அமைச்சராக பதவி வகித்த அலி சப்ரிக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவியை வழங்குவது ஜனாதிபதியின் திட்டமாக இருந்தது. ஆனால் அலி சப்ரியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது தடைபட்டது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அலி சபீராவிடம் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாக, நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க அலி சப்ரி இறுதியாக ஒப்புக்கொண்டதாக தெரிய வந்தது.
கோட்டா-ரணில் சூடான பேச்சு!
ஆனால் இறுதியில் ரணில் கடுமையான முடிவை எடுத்ததுடன் தற்போதைய நிதி நெருக்கடிக்கு தீர்வு காண தனக்கும் நிதியமைச்சர் பதவி தேவை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இதன்படி ரணில் உடனடியாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தை அழைத்து தனக்கு நிதியமைச்சு தேவை என்பதை ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்ஷாவிடம் கோத்தா பேசுகிறார்!
இதேவேளை, சமகி ஜனபலவேகவின் ஹர்ஷ டி சில்வாவிற்கு நிதியமைச்சகத்தை பொறுப்பேற்குமாறு கோரி தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ஒருமுறை நடவடிக்கை எடுத்தார்.
ஜனாதிபதிக்கும் ஹர்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக சில உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உறுதிப்படுத்தப்படாத போதிலும், தற்போதைய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கத் தயாரில்லை என ஹர்ஷ ஜனாதிபதியிடம் கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவ்வாறான அரசாங்கம் அமையும் பட்சத்தில் , தான் நிதியமைச்சர் பதவியை ஏற்கத் தயார் எனவும் ஹர்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி அலி சப்ரியைப் போன்று ஹர்ஷாவும் நிதியமைச்சர் பதவியை ஏற்க மறுத்ததையடுத்து இறுதியில் ரணிலுக்கே ஜனாதிபதி பதவியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஹரின்-மனுஷா சஜித் கட்சியிலிருந்து நீக்கம்!
இதேவேளை, கட்சியின் செயற்குழு செவ்வாய்க்கிழமை சஜித் தலைமையில் கூடியது. சமகி ஜன பலவேகவின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட ஹரீனும் மனுஷாவும் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் செயற்குழு இது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தது.
கயந்த கருணாதிலக்க, “இந்த அரசாங்கம் முழுமையான மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பது முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது ” என்றார்.
“நீங்கள் பிரதமராக முயன்றீர்கள் என சிலர் கூறுகின்றனர், ஆனால் ராஜபக்சக்களை வீட்டிற்கு அனுப்பும் நிபந்தனையின் பேரில் நீங்கள் பிரதமராக முயன்றதை அநேகர் மறந்து விடுகின்றனர்” என ஹெக்டர் அப்புகாமி சொன்னார் .
“இன்று ராஜபக்ஷக்கள் முழுமையாக மீள எழுச்சி பெற்றுள்ளனர். சுவரில் சாய்ந்திருந்த கோட்டாபயவிடம், நிபந்தனையின்றி சென்று அவர்களுக்கு ஆதரவளித்த ரணில் விக்கிரமசிங்க காரணமாகவே மீண்டும் அவர் பாதுகாப்பு பெற்றார்” என
நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் எப்போதும் ராஜபக்சக்களின் மீட்பர். பாதுகாவலர்.ஆனால் அந்த பாதுகாவலர்களின் வரிசையில் எங்கள் அன்புக்குரியவர்களில் இருவர் இணைந்திருப்பது எமக்கு வருத்தமளிக்கிறது” என்றார் சமிந்த விஜேசிறி.
டயானாவையும் வெறியேற்ற வேண்டும்!
அதன்படி இறுதியில் ஹரினையும் மனுஷாவையும் கட்சியில் இருந்து நீக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றுமொரு விடயத்தை எழுப்பினார். டயானா கமகே அரசாங்கத்தில் இணைந்தமை தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியது.
தற்போது சட்டத்தரணிகள் அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
டயானா தொடர்பிலும் இறுதித் தீர்மானம் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென ராஜித தெரிவித்துள்ளார்.
பசிலுக்கு சமலிடமிருந்து முதல் அழைப்பு!
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2015ஆம் ஆண்டு மஹிந்த அரசியலில் இருந்து விலகியிருந்தால், ராஜபக்ச குடும்பத்திற்கு இவ்வாறானதொரு கதி ஏற்பட்டிருக்காது எனவும், ஒவ்வொரு அரசியல்வாதியும் எப்போது அரசியலில் இருந்து விலகுவார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் சமல் தெரிவித்திருந்தார்.
சமல் இப்படிக் கூறியதைத் தொடர்ந்து சமலுக்கு தனது முதல் தொலைபேசி அழைப்பை ராஜபக்ச குடும்பத்தின் இளைய உறுப்பினரான பசில் ராஜபக்சவிடம் இருந்து வந்தது.
சமலின் அறிக்கையை கடுமையாக விமர்சித்த பசில், அவ்வாறு பேசியே இருகக் கூடாது எனவும், சமலும், ஷசீந்திரவும் அரசியலில் இந்தளவுக்கு வருவதற்கு மஹிந்த பெரிதும் உதவியதாகவும் தெரிவித்தார். எனவே அவர்களை மறக்க வேண்டாம் என பசில் சமலிடம் சொன்னார்.
மஹிந்த குடும்பம் இணைந்தது!
எவ்வாறாயினும், சமலின் அறிக்கையுடன், ராஜபக்ச குடும்பத்தினரிடையே மீண்டும் ஒரு அரசியல் ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது. உத்தியோகபூர்வமற்ற அரசாங்க உளவுத்துறையின் தகவல்களின்படி, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் கடந்த வாரம் கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.
தற்போது பல்வேறு இடங்களில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நிரந்தர பாதுகாப்பான இல்லம் ஒன்றைக் கண்டுபிடித்துத் தருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட தலைப்புகளில் ஒன்று.
அவர் தங்கியிருந்த விஜேராமவின் உத்தியோகபூர்வ இல்லம் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததால் அலரிமாளிகையில் தங்க முடியவில்லை.
மஹிந்தவுக்கு பாதுகாப்பான இடம் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.
அதன் பிரகாரம், பாதுகாப்பான ஓரிடத்தை தேடுமாறு ஜனாதிபதி உடனடியாக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மங்கள சமரவீர மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் வாழ்ந்த உத்தியோகபூர்வ இல்லமே இதற்கு மிகவும் பொருத்தமான இடம் என அங்கிருந்த பலர் தெரிவித்தனர்.
அதிகாரத்தை எப்படி எடுப்பது?
மேலும், பசிலை குறிவைத்து சிலர் தயாராகி வரும் அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் கூட்டத்தினரிடையே நீண்ட விவாதம் இடம்பெற்றது. பசில் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தத்திற்கும் ஆதரவளிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்திற்கு மீண்டும் ஆட்சியை எப்படி பெற்றுக் கொள்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவம் அறிய வருகிறது.
கபில புஞ்சிமான்ன
தமிழில் : ஜீவன்