அட்டலுகம ஆயிஷா கொலை குறித்து அனைத்தையும் கக்கிய கொலையாளி !
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 09 வயதுடைய பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (29) கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலையுண்ட சிறுமியின் உறவினர் என்பதுடன் போதைப் பொருளுக்கு அதிக அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 27ம் தேதி அவர் வீட்டில் இருந்தபோது சிறுமி தனியாக நடந்து செல்வதை பார்த்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமியை தூக்கிச் சென்ற சந்தேகநபர், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு அவர் பயந்ததாகவும் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தினால் தான் சிறுமியைக் கொல்ல வேண்டி வந்தது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
கொலைகள் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
பண்டாரகம, அட்டாலுகம பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழிக்கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
மறுநாள் மதியம், சிறுமியின் சடலம் வீட்டை ஒட்டிய சதுப்பு நிலத்தில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
சதுப்பு நிலப்பகுதியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரும் அங்கு இருந்துள்ளார்.