கோட்டா கோ கம செயற்பாட்டாளர் ரட்டா பொலிஸாரால் கைதாகி , பிணையில் விடுதலை
ரட்டா எனப்படும் சமூக ஊடக செயற்பாட்டாளரான ரதிந்து சேனாரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி, கோட்டை நீதிமன்றங்களுக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் குற்றவியல் நிர்ப்பந்தம் ஆகிய குற்றச்சாட்டின் பேரில், கொம்பனித்தீவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரும், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் இன்று கொம்பனித்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினர்.
சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
பிந்திய தகவல்
அவர் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.