யாழ். விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்த நிலையில் அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இலங்கையிலுள்ள எந்தவொரு விமான நிலையத்தையோ, தொழிற்சாலையையோ, அரச நிறுவனத்தையோ மூடும் திட்டம் எதுவுமில்லை” என்று பிரதமர் பதிலளித்தார்.
கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இன்னமும் தமிழகத்துக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கவில்லை. உள்ளூர் சேவைகளே இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.