42 முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்திய ஜனாதிபதி!
42 அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் முதன்முறையாக ஸ்ரீலங்கா டெலிகொம், முதலீட்டுச் சபை மற்றும் போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு என்பன வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் 23 அமைச்சரவை அமைச்சர்களுக்கான நிறுவனப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு அமைச்சுக்கும் எந்தவொரு நிறுவனமும் வர்த்தமானியில் வெளியிடப்படாவிட்டால், அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கீழ் வரும் எனவும் இந்த வர்த்தமானி அறிவித்தல் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.