காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்திய வசந்தா ஹந்தபாங்கொட கைது

மொட்டு கட்சி சார்பு பொதுக் கல்விச் சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகை முன்பாகவும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அவரும் மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மேயரின் மகன், மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்கள் மூவர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
வசந்தா ஹந்தபாங்கொட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கடந்த காலங்களில் அனைத்து ஆசிரியர் கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர் வர்த்தக போராட்டங்களுக்கு இடையூறு விளைவித்து வந்த ஒருவராகும்.
சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் நாளை (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவின் இறுதிக் கூட்டத்திற்கு மே 09ஆம் திகதி அவர் அலரிமாளிகைக்கு வந்திருந்தார். கோட்டா கோகமைத் தாக்கிய பின்னர், அவர் மக்களால் பிடித்து வீதியில் வைத்துத் தாக்கப்பட்டார்.
அப்போதைய வீடியோ: