பிரபல பின்னணி பாடகர் கேகே மாரடைப்பால் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்.
பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (அவருக்கு வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்க நிலைக்கு ஆளானார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் 66க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார். அதில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
53 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். கேரளத்து தம்பதிக்கு மகனாக பிறந்த கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார். ரசிகர்கள் பலர் தங்களது டுவிட்டரில் மறைந்த பாடகர் கேகேவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம்.
அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் பாடகர் கேகேவின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோசல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது கடைசி மேடை நிகழ்ச்சியில் நோய்வாய்ப்பட்ட சமயம் ….
The very moment when #KK felt uneasy and was taken to CMRI hospital, #Kolkata. He was declared brought dead.
He performed the show and ended it.#RIP #KK Not KK pic.twitter.com/WFOHKdCqFn
— Madhuri Rao (@madhuriadnal) June 1, 2022