பிரேசிலில் முதன்முறையாக 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி.

2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓயாத நிலையில் குராங்கு காய்ச்சல் சர்வதே அளவில் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வரும் இந்த குராங்கு காய்ச்சல் 24 நாடுகளில் சுமார் 300 பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் பிரேசில் நாட்டிலும் குரங்கு காய்ச்சல் நுழைந்துவிட்டது. அங்கு 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.