ஆட்சியிலிருப்போரை அரசாக ஏற்க முடியாது! தீர்வுக்கு ஒரே வழி இதுதான்….. : சுமந்திரன்

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே ஒரே தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிப்பதால், அவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனை ஏற்றுக்கொள்ள எந்த காரணமும் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.