முதலை தாக்கி குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

புல் வெட்டுவதற்காகச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் குறித்த குடும்பஸ்தர் தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் நிந்தவூர் – 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் (வயது 55) என்பவராவார்.
கடற்படையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஏழு பிள்ளைகளின் தந்தையாகிய அப்துல் மஜீட் ஹூசைன், ஓர் இசைக் கலைஞனாவார். இவர் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்து விளங்கியதுடன் நிந்தவூர் பிரதேச மக்களால் ‘டோல் மாஸ்டர்’ என அழைக்கப்பட்டார்.
கடந்த வருடம் நிந்தவூர் பிரதேச செயலகத்தால் இவருக்குச் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.