பல்கலை மாணவர்கள் பேரணி: தடை கோரும் மனு நிராகரிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நெலும் பொக்குன – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்குத் தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கறுவாத்தோட்டப் பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு நிராகரித்துள்ளது.