வவுனியாவில் குளத்தில் நீராடச்சென்ற நால்வரில் இரு சிறுவர்கள் சடலமாக மீட்பு.
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் உட்பட நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு சென்றனர். எனினும் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நால்வரில் இருவர் அங்கு நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கினர் எனினும் அவர்கள் ஒருவாராக குளத்தினுள் இருந்து வெளியேறியிருந்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அயலில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நீரில் மூழ்கிய இருவரையும் பொதுமக்களும் பொலிஸாரும் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் பின்னர் கவிந்து வயது 15 என்பவருடைய சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது எனினும் நீண்ட நேரமாகியும் கைலாஸ் என்ற 16 வயது சிறுவனை தொடர்ந்தும் தேடிய போது சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.