ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்காவில் தடுத்து நிறுத்தப்பட்டது
கொழும்பு வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணிக்கவிருந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் புறப்பட இருந்த விமானத்தில் இருந்த 191 பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு திருப்பி விடப்பட்டனர்.
இந்த விமானம் ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.
ரசியாவின் அதிகாரி ஒருவர் இது குறித்து பேசும் போது , இலங்கை தலைவர் ஒருவர் ரசியாவின் விமானங்களை இலங்கை தடுத்து நிறுத்தாது என உறுதியளித்தன் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த விமானம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் குறித்து அயர்லாந்து நிறுவனம் ஒன்று புகார் ஒன்றை அளித்துள்ளதாக தெரியவருகிறது.