மஹிந்த கஹந்தகமகேவுக்கு ஜூன் 8 வரை விளக்கமறியல்…..

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகேவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில், இவர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.