இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் அவர் வரிசையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரிசையில் நிற்காமல் உள்ளே வருமாறு பல அதிகாரிகள் அழைத்த போதிலும், சங்கக்கார வரிசையில் சென்று தனது வேலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.