கடந்த 5 மாதங்களில் 120,000 பேர் வெளிநாடுகளுக்கு பயணம்.

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பு என அதன் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.