21 இற்கு பஸிலும் ஆதரவு.

அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, 21ஆவது அரசமைப்பு திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திருத்தம் உங்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றதா என முன்னாள் நிதி அமைச்சரிடம் ஊடகவியலாளர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியபோது, பஸில் ராஜபக்ச சிரித்துக் கொண்டே, “காய்க்கின்ற மரத்துக்கே அதிகம் கல்லெறியப்படும் என்பது போல், வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் அதிக தடைகளைச் சந்திக்க நேரிடும்” – என்றார்.